பாங்காங்:

தாய்லாந்து நாட்டின் பாங்காக் கோவிலில் நிர்வாண படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்ட அமெரிக்க சுற்றுலா பயணிகள் கைது.

தாய்லாந்து நாட்டின் பாங்காக் வந்த அமெரிக்க சுற்றுலா பயணிகள் 2 பேர் அங்குள்ள வாட் அருண் கோவிலில் தங்களை நிர்வாண படம் எடுத்து அதனை தங்கள் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர்.

இது தொடர்பாக குடிஅமர்வு அதிகாரிகள் ஜோசப், டிராவிஸ் தசில்வா ஆகியோரை கைது செய்தனர். பாங்காக் நாட்டின் டான் மியூங் ஏர்போர்ட்டில் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் போது இரு சுற்றுலா பயணிகள் செவ்வாயன்று தாமதமாகக் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு இருவரும் நாடு கடத்தப்படுவார்கள் என குடிஅமர்வு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தாய்லாந்தில் அதன் புத்த மதத்திற்கு அவமரியாதை மற்றும் தாக்குதல் என்று கருதப்படும் வகையில் நடந்தால் நடவடிக்கை எடுக்க மிகவும் கடுமையான சட்டங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.