வாஷிங்டன்,

ரும் 2018ம் வருடம் கோடைக்காலத்தில், அமெரிக்காவின் நாசா நிறுவனம் சூரியக் கோளத்தை ஆராய ஒரு திட்டத்தினை தீட்டியுள்ளது.

அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளிகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. ஏற்கனவே சந்திரன், செவ்வாய் போன்ற கோள்கள் குறித்து ஆய்வு செய்துவரும் நாசா, தற்போது சூரியன் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக கூறி உள்ளது.

இதற்காக ஐந்து அடுக்கு பாதுகாப்பு கவச உறைகளுடன் தயாராகும் ஆய்வுக்கருவி ஒன்றினை தயாரித்து உள்ளது. இந்த கருவி மூலம் வரும் 2018ம் வருடம் கோடைக்காலத்தில் விண்ணுக்கு  அனுப்பி சோதனை செய்ய அமெரிக்காவின் நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சூரியனில் இருந்து வெளியாகும் கடும் வெப்பம் காரணமாக  மனிதர்களால் செல்ல முடியாது என்பதால் இந்த பத்து அடி உயரமான ஆய்வுக்கருவியினை நாசா தயார் செய்துள்ளது. இந்த கருவி மூலம்  சூரியக்கோளுக்கு மிக அருகில் நிறுவி ஆராய்சி செய்ய முடிவு செய்துள்ளது.

சூரியனை ஆராய இயக்கப்படும் கருவிக்கு  ‘பார்க்கர் சோலார் ப்ரோப் ப்ளஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கருவி, சூரியக் கதிர் மற்றும் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப் பட்டுள்ளது.  இதன் மூலம் சூரியனின் வெளிப்புறம்,  சோலார் சிஸ்டம் ஆகியவைகளைப் பற்றிய மேலும் பல உண்மைகளைக் கண்டறியலாம் என்று நாசா தெரிவித்து உள்ளது.

இந்த ஆய்வுக்கருவி சூரியனின் பரப்பிலிருந்து 3.7 மில்லியன் மைல்களுக்குள் சுற்றி வரும்.  இந்த ஆய்வானது நட்சத்திரங்களின் பவுதிகத்தன்மை, சூரியக் காற்று, மற்றும் இதுவரை மர்மமாக உள்ள சூரியனின் உண்மைகள் பலவற்றையும் விளக்கக்கூடும் என்றும்,

இந்த ஆய்வுகளின் மூலம் வானிலை நிகழ்வுகள் பலவற்றையும் முன்கூட்டியே அறிந்து, அதனால் பூமியில் ஏற்படும் பின் விளைவுகளை முன்னெச்சரிக்கையுடன் கையாள முடியும் என நாசா தெரிவித்து உள்ளது.

சூரியனின் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு ஒரு உலோகத்தைக் கண்டுபிடிக்கவே சுமார் 60 வருடங்கள் ஆயிற்று என தெரிவிக்கும் நாசா,  சூரியக் காற்றில் சூரியனிலிருந்து வெளிப்படும் பலவகை வாயுக்கள் நிரம்பி உள்ளன.  இது நேரடியாக பூமிக்கு எந்த தாக்கமும் ஏற்படுத்தாது,  ஆனால் பூமியின் தட்ப வெட்ப மாறுதல்கள் பலவும் இதன் தாக்கத்தால் ஏற்படுபவையே என்றும் தெரிவித்து உள்ளது.

பார்க்கர் சோலார் ப்ரோப் ப்ளஸ் மெர்குரி கிரகத்தை விட சூரியனுக்கு அருகில் இருக்கும்.  சூரியக் காற்றின் அனைத்து வேகங்களையும்  அளவிடும் என்றும், இதில் பொருத்தப்பட்டுள்ள 4.5 அங்குல கனமான தகடு, 2500 டிகிரி ஃபாரென்ஹீட் வெப்பத்தை தாங்கக் கூடியது என்றும் கூறியுள்ளதும.

இந்த தகடானது எவ்வளவு  வெப்பம் இருப்பினும், அதை தடுத்து, ‘விண்கலத்தின் உட்புறமானது நமது பூமியின் வெப்ப அளவில்தான் வைத்து இருக்கும் என்றும்,  இந்த பார்க்கர் சோலார் ப்ரோப் ப்ளஸ்,  சூரியனை சுற்றி மணிக்கு 450,000 வேகத்தில் பயணிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி அடுத்த ஆண்டு தொடங்கி, வரும் 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்ப்ப தாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்  இந்த ஆய்வு, விண்வெளியில இதுவரை எந்த நாடும்  செய்யாத ஆய்வு என்றும்,  ஆய்வின் முடிவில் பல எதிர்பாராத ஆச்சரியங்கள் நமக்கு விளங்கும் என்றும் கூறியுள்ளனர்.

ஏற்கனவே   சூரியன் குறித்து பார்க்கர் என்ற ஆராய்ச்சி யாளர்  1958ல் சூரியக் காற்று குறித்து  பல ஆய்வுக் கட்டுரை களை எழுதி  சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளார்.

மேலும்,  சூரியனை சுற்றி வெற்றிடம் (Vacuum) இருந்தது என பல அறிவியல் வல்லுனர்கள் நம்பி வந்த நேரத்தில் இவரது ஆராய்ச்சி நிராகரிக்கப் பட்டது.  ஆனால், அவரது ஆராய்ச்சியை அவரது சக ஊழியரும் 1983ல் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் என்பவரால் பாதுகாத்து வைக்கப்பட்டது.

இந்த ஆராய்ச்சி நிராகரிக்கப்பட்டு   2 வருடங்களுக்குப் பிறது செயற்கைக்கோளின் மூலமாக சூரியனை சுற்றி காற்று மண்டலம் இருப்பது கண்டறியப் பட்டது.

இதன் காரணமாக ஒரு தனிப்பட்ட மனிதரின் பெயரில் ஆய்வுக்கருவியின் பெயர் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், தனிப்பட்ட ஒருவரின் பெயரில் ஒரு  கருவியின் பெயர்  அமைப்பது  இதுவே முதல் முறை என நாசாவின் அதிகாரி தாமஸ் கூறியுள்ளார்,