வாஷிங்டன்:

அமெரிக்கா ’தாட்’ எனும் பெயர் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை துல்லியமாக குறிவைத்து இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அமைப்பை உருவாக்கியுள்ளது.

வட கொரியாவின் ஏவுகணைகள் அலாஸ்கா மாகாணம் வரை வந்து தாக்கக்கூடிய ஆற்றல் பெற்றவை என்றும், அமெரிக்கா முழுவதும் தாக்கும் ஆற்றல் பெற்ற ஏவுகணையை விரைவில் பெறும் என்றும் கூறப்படுகிறது.

சோதனையில் பசிபிக் கடல் மீது பறந்து கொண்டிருந்த அமெரிக்கா வான் படையின் சி-17 விமானத்திலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணையை அலாஸ்காவிலிருந்து ஏவப்பட்ட ‘தாட்’ இடைமறிப்பு ஏவுகணை தடம் பற்றி அறிந்து தாக்கி அழித்தது என்று அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு முகமை தெரிவித்தது.