பிலடெல்பியா:
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மற்றும் என்னைக்காட்டிலும் அதிபர் பதவிக்கு தகுதியானவர் என்று அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டினார்.
அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தில் நடைபெற்ற ஆளும் ஜனநாயகக் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா பேசினார்.

அப்போது, தற்போதைய கட்சியின் வேட்பாளர் ஹிலாரி, ‘‘என்னை விடவும், முன்னாள் அதிபர் பில் கிளின்டனை விடவும் அதிபர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் ’’ என்றும், அமெரிக்க அதிபராக பதவி வகிப்பதற்கு ஹிலாரி மிகவும் தகுதி வாய்ந்தவர் என்றும் ஒபாமா புகழாரம் சூட்டினார்.
எதிர்கட்சியை சேர்ந்த டிரம்ப், நமது ராணுவத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளார். நம்பிக்கை இல்லாத அவரை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் நம்மிடம் உள்ளவர்களில் சிறந்தவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும்,

ஹிலாரி என்னுடைய அரசில் வெபளியுறத்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றியவர் என்பதால், என்னென்ன சிக்கல் எப்போதும் வரும், அதை எப்படி சமாளிக்க வேண்டும், அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி நன்கு தெரிந்தவர் ஹிலாரி என்றார். ஆகவே அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என தாம் நம்புவதாகவும் ஒபாமா கூறினார்.
Patrikai.com official YouTube Channel