100 மில்லியன் டோஸ்கள் அளவிற்கு நவீன தனித்துவ கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மாடர்னா நிறுவனத்திடம் இருந்து  வாங்க  அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.

தனித்துவ கொரோனா வைரஸுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் 100 மில்லியன் டோஸ்கள் அளவுக்கான  மாடர்னா நிறுவனத்திடம் இருந்து எம்ஆர்என்ஏ -1273 தடுப்பு மருந்தைப் பெறவுள்ளது. மேலும் கூடுதலாக 400 மில்லியன் டோஸ்கள் வரை வாங்குவதற்கான திட்டமும் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளளது. மாடர்னாவின் பரிசோதனை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தற்போது 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டன்: மாடர்னா நிறுவனத்தின் எம்.ஆர்.என்.ஏ -1273 என்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை அமெரிக்க அரசு 100′ மில்லியன் டோஸ்கள் வரை வாங்கியுள்ளதாக கடந்த செவ்வாய்கிழமை அந்நிறுவனம் அற்வித்தது. இந்த ஒப்பந்தம் அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள COVID-19 தடுப்பு மருந்தை விரைவாக கிடைக்கச் செய்வதற்கான அமெரிக்க அரசாங்கத்தின் குறிக்கோளின் ஒரு பகுதியாகும்.

சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின்படி,  அமெரிக்க அரசு மாடர்னாவுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை 100 மில்லியன் டோஸுக்கு விலையாக வழங்கியுள்ளது. ஆனால் இம்மருந்து கடந்த ஜூலை 3 ஆம் தேதி தொடங்கிய 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்டின் ஒரு பகுதியாக, தேவைப்பட்டால் கூடுதலாக 400 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வாங்குவதற்கான வாய்ப்பையும் அரசாங்கம் வழங்கும்.

செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “இன்று மாலை, மாடரோனா நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை நூறு மில்லியன் டோஸ்கள் தயாரித்து வழங்குவதற்கான ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று அறிவித்தார்.

“எங்கள் எம்ஆர்என்ஏ தடுப்பு மருந்தின் மீது   அமெரிக்க அரசாங்கம் வைத்திருக்கும்  நம்பிக்கையையும், தொடர்ந்து ஆதரவையும் நாங்கள் பாராட்டுகிறோம்” என்று மாடர்னாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் கூறினார். “எம்ஆர்என்ஏ -1273 இன் சோதனைகள் மற்றும் உற்பத்தியில் கண்டிருக்கும் முன்னேற்றம் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அதன் தயாரிப்பில் நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம்.  தற்போது 3 ஆம் கட்ட ஆய்வு NIAID மற்றும் BARDA உடன் இணைந்து நடத்தப்படுகிறது. இதற்கு இணையாக, இந்த உலகளாவிய சுகாதார நெருக்கடியை பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பு மருந்தின் மூலம் நிவர்த்தி செய்ய எங்கள் பங்குதாரர்களான லோன்சா, கேடலண்ட் மற்றும் ரோவி ஆகியோருடன் இணைந்து எங்களுடைய  உற்பத்தி திறனை அதிகரித்து வருகிறோம். ” என்றார்.

mRNA -1273-ன் மூன்றாம் கட்ட கோவ் ஆய்வு என்ஐஎச் மற்றும் பார்டாவுடன் இணைந்து நடத்தப்படுகிறது. போலி மருந்து வழங்கப்பட ஒப்பீட்டு கட்டுப்பாட்டுக் குழுவும் கொண்டு,  சுமார் 30,000 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய பெரும் சோதனைகள் அமெரிக்காவில் நடத்தப்பட உள்ளன.

Thank you: Times Now News