வாஷிங்டன்

மெரிக்கா செனேட் வரி விகித மாறுதலுக்கு அனுமதி அளித்துள்ளது.

கடந்த 30 வருடங்களாக அமெரிக்காவில் வரி விகிதங்கள் மாற்றப்படாமல் உள்ளன. இந்த வரி விகிதங்களை மாற்றி வரிகளை குறைப்பதாக அதிபர் டிரம்ப் தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தார்.  தற்போது புதிய வரி விகிதங்கள் பற்றிய வாக்கெடுப்பு அமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்தது.  அமெரிக்க சட்டப்படி அதிபரிடம் அனுப்பப்படும் எந்த ஒரு சட்டமும் சீராக பாராளுமன்றத்தில் ஆராயப்பட்டு அதன் பின் வாக்கெடுப்பு நடத்திய பின்னரே அனுப்பப்படும்  தற்போது இந்த வரி சீரமைப்புச் சட்டம் 51-49 என்னும் வாக்கு விகிதத்தில் அனுமதி பெறப்பட்டு அதிபருக்கு அனுப்பப் படுள்ளது.

இந்த புதிய வரி விகிதங்களில் முக்கியமானது நிறுவன வரி (Corporate tax) விகிதம் ஆகும்.  தற்போதுள்ள 35% நிறுவன வரி 20% ஆக குறைக்கப்பட உள்ளது.  அடுத்தது வீட்டு அடமான வரி விகிதம் ஆகும்.  இதில் இரு விதமான கருத்துக்கள் எழுப்பப் பட்டுள்ளன. இத்துடன் வீடு வாங்கும் வரிகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவைத் தொடர்ந்து இஸ்ரேலும் தனது நாட்டில் நிறுவன வரியைக் குறைக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.  இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இது பற்றிக் குறிப்பிடுகையில், “அமெரிக்கா தனது நாட்டில் வரிவிகிதங்களைக் குறைக்க முடிவு எடுத்துள்ளது.  இஸ்ரேல் அதே போல வர்த்தகத் துறையின் நன்மைகளில் பின் தங்கி இருக்கக்கூடாது.  அது வரி விதிப்பாக இருந்தாலும் சரி, அரசு நிர்வாகமாக இருந்தாலும் சரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.  இதனால் இஸ்ரேலிலும் நிறுவன வரி விகிதம் விரைவில் குறைக்கப்படலாம் என தெரிய வருகிறது.