ந்த கொரோனா தினம் தினமும் புதுசு புதுசா பிராடுத்தனங்களை அறிமுகப்படுத்திட்டே போகுது. லேட்டஸ்ட்டா ஆம்பூர்ல ஒருத்தர் மான் கறினு சொல்லி பூனை கறியை விற்று சிக்கியிருக்கார்.

வனத்துறை அதிகாரி ஒருவர் இது பற்றி கூறிய போது, “ஆம்பூர்ல ஒருத்தர் மான் கறி விக்கிறதா எங்களுக்கு தகவல் வந்தது. அவரை கையும் களவுமா பிடிக்கணும்னு திட்டம் போட்டு, நாங்க ஒரு டீமா ஆம்பூர் கிளம்பினோம். அங்க போயிட்டு அந்த குறிப்பிட்ட போன் நம்பரை கான்டாக்ட் பண்ணி, சென்னைலருந்து வரேன். நான் ஒரு பிசினெஸ்மேன் அப்டினு அறிமுகப்படுத்திட்டு, மான் கறி ஒரு கிலோ வேணும்னு கேட்டோம். அப்போ மணிகண்டன்னு ஒருத்தர் பேசினாரு. எங்கள பெரியான்குப்பம் பஸ் ஸ்டாண்டுக்கு காலைல பத்து மணிக்கி வர சொன்னார். நாங்களும் கிளம்பி அவர் சொன்ன இடத்துக்கு போனோம்” என்று விவரிக்கிறார்.
இவர்கள் காலையில் பத்து மணிக்கு பெரியான்குப்பம் பேருந்து நிலையம் சென்று காத்திருந்திருக்கின்றனர். ஆனால் சொன்னபடி மணிகண்டன் வரவில்லை. பகல் ஒரு மணி வரை காத்திருந்து விட்டு அவர் வரவில்லை என்பதால் சந்தேகப்பட்டு அவரை பற்றி விசாரித்து அவர் வீட்டிற்கே சென்றுள்ளர் வனத்துறையினர்.
அங்கு சென்று பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கே மணிகண்டன் வீட்டுப்பூனை ஒன்றை வெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்திருக்கிறார். அவரை பிடித்து விசாரித்த போது தான், இவர் இது போல பூனைகளை பிடித்து அவற்றை மான் கறி என்று பொய் சொல்லி, பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
25 வயதான மணிகண்டன் ஆம்பூர் பெரியான்குப்பம் நரிக்குறவ காலனியை சேர்ந்தவர். இந்த பூனைக்கறியை ஒரு கிலோ ரூ. 1,500/- வரை விற்று வந்துள்ளார் இவர்.