அலகாபாத்: உத்திரப்பிரதேச மாநிலத்தில், ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கும் 19,000 ஓட்டுநர்கள், தங்களுக்கான 2 மாத ஊதிய நிலுவைத்தொகையைக் கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாரதீய ஜனதாவின் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்திரப்பிரதேச மாநிலம் நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் வன்முறைகளுக்கும் பெயர்பெற்றதாகும். மிகவும் பின்தங்கிய மாநிலமும்கூட.
இந்நிலையில், அம்மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஓட்டும் 19000 ஓட்டுநர்கள் தங்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள 2 மாத ஊதியத்தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென்று கேட்டு திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் நிலவும் காலகட்டத்தில், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதானது மாநில அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.