டெல்லி: அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்தக்கு குடியரசுத் தலைவர், துணைகுடியரசு தலைவர் பிரதமர் அஞ்சலி செலுத்தினர்.
நாடு முழுவதும் இன்று (டிசம்பர் 6ந்தேதி) மறைந்த சட்டமேதை அம்பேர்கர் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, துணைகுடியரசு தலைவர் தங்கார், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நாடு முழுவதும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 66-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்,