
பெங்களூரு
பிரபல நடிகரும் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினருமான அம்பரீஷ் சட்டசபைக்கு செல்லாமல் இசை நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளார்.
கர்னாடகா மாநிலம் பெல்காம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அம்பரீஷ். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் பிரபல கன்னட நடிகர் ஆவார். தமிழிலும் ப்ரியா, தாய்மீது சத்தியம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். பிரபல தமிழ் நடிகை சுமலதாவை அம்பரீஷ் திருமணம் செய்துள்ளார்.
தற்போது கர்நாடக மாநில சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறுகிறது. காங்கிரஸ் தொகுதி எம் எல் ஏவான நடிகர் அம்பரீஷ் அவை நடவடிக்கைகளில் நேற்று கலந்துக் கொள்ளவில்லை. நேற்று பெங்களூருவில் ஒரு திரைப்பட இசை நிகழ்ச்சி பெங்களூருவில் நடை பெற்றது. அதில் அம்பரீஷ் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இது குறித்து கர்னாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர், “அம்பரீஷ் வேறு விதமான அரசியல் வாதி. அவரைப் பொருட்படுத்த தேவையில்லை” எனக் கூறி உள்ளார். காங்கிரஸ் பதவி ஏற்றதில் இருந்து 14 கூட்டத்தொடர்கள் நடந்துள்ளன. மொத்தம் நடைபெற்ற 248 நாட்கள் தொடரில் வெறும் 4 நாட்கள் மட்டுமே அம்பரீஷ் சட்டசபைக்கு வந்துள்ளார்.
சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க நேரமில்லாமால் இசை நிகழ்வில் அம்பரீஷ் நடனமாடியது அரசியலில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
[youtube-feed feed=1]