தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய நிறுவனமான அமேசான் பொருட்கள் விற்பனை, மேகக் கணிமை மற்றும் விண்வெளி ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இணையத்தில் முதன்மைப் பெயர்களான .காம், .இன் போன்ற பெயர்களை பதிவு செய்யம் ICANNஅமைப்பிடம் .amazon என்ற நீட்சியில் இணையத்தள பெயர்களை வைத்துக்கொள்ள அனுமதிவேண்டி   ICANN நிறுவனத்திடம் விண்ணப்பித்து இருந்தது.

ஆனால் தென்அமெரிக்க நாடுகளில் இதை இதை எதிர்த்தன. ஏனெனில் தென் அமெரிக்காவில்தான் அமேசான் நதி பாய்கிறது

பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், கயானா, பெரு, சுரினாம் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான  (ACTO) உறுப்பினர்கள் அனைவரும், அமேசான் வனத்துடன் பிரிக்க முடியாத உறவு காரணமாக, அந்த டொமைன் எந்த விதத்திலும், ஒரு நிறுவனத்தின் ஏகபோக உரிமையுடன் இருக்கக் கூடாது,  “என்று வாதிட்டுவருகின்றனர்

“மாறாக, அமேசான் பிராந்தியத்தின் இயற்கை, பண்பாட்டு, அடையாளப் பாரம்பரியம் ஆகிய வற்றை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், அதன் மூலம் பிராந்திய பொருளாதாரத்தை வளப்படுத்தும் வகையிலும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இந்தப் பெயரை நிர்வகிப்பதில் பங்கு கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும் என்றும் வாதிட்டுவருகின்றன

அதே சமயம் 3 மில்லியன் டாலர் அளவுக்கு இலவச கின்டில் புத்தகங்களும், மேகக்கணிமை சேவைகளும் கொடுப்பதாக அமேசான் கடந்த வருடம் கூறினாலும் இந்த வருடம் அந்த  இலவச சேவையை வழங்கமுடியாது என்று இப்போது அறிவித்துள்ளது

தற்போது ICANN நிறுவனமும் தென்அமெரிக்க நாட்டு கூட்டமைப்புடன்(ACTO), அமெசான் பேச்சு வார்த்தை பரஸ்பர முடிவுக்கு வரவில்லை என்பதால் தற்போது அமெசான் கேட்ட .amazon இணையத்தள பெயரை கொடுக்கும் விண்ணப்பம் அடுத்த கட்டத்திற்கு சென்றாகவேண்டியது உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம்  அமெசான் நிறுவனம் .amazon என்ற பெயரில் இணையத்தள பெயர்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் வேறு நாட்டின் பிரதான பெயரை இன்னொரு நாடு எப்படி பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதில் நிச்சயம் எதிர்காலத்தில் சிக்கல்கள் வரும், இப்போதே இதை முறையாக கையாள வில்லை என்றால் எதிர்காலத்தில் நிச்சயம் பெரும் சிக்கல்கள் நாட்டினருக்கு இடையே வரும்…

-செல்வமுரளி