ஹாலிவுட்டின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம்மை 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அமேசான் வாங்கியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பீட்டில் 61,434 கோடிகளாகும்.

எம்ஜிஎம் (Metro Goldwyn Mayer) ஃபிலிம்ஸ் 1924-ல் தொடங்கப்பட்டது. இன்று வரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக எம்ஜிஎம் விளங்கி வருகிறது. சுமார் நான்காயிரம் திரைப்படங்கள் இந்நிறுவனத்தின் உடமையாக உள்ளன.

உலகம் முழுவதும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தப் படங்களின் மொத்த உரிமையும் எம்ஜிஎம் நிறுவனத்திடம் உள்ளது. இப்போது இது அமேசான் கைவசம் சென்றுள்ளது. அமேசானின் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இனி ஜேம்ஸ் பாண்ட் படங்களை ரசிகர்கள் வீட்டிலிருந்தபடியே பார்க்கலாம்.

திரைத்துறையில் மட்டுமின்றி விளையாட்டிலும் அமேசான் கவனம் செலுத்துகிறது. நேஷனல் ஃபுட்பால் லீகை ஒளிபரப்பும் உரிமையை அமேசான் பெற்றுள்ளது.