டில்லி
நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் மரணம் அடைந்ததாக வந்த வதந்திகளுக்கு அவர் மகள் நந்தனா மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் கடத்த 1933 ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்தார். உலக அளவில் அமர்த்தியா சென் பொருளாதாரத்தில் மிகச்சிறந்த அறிஞராக விளங்கி வருகிறார்.
இன்று பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் காலமானார் எனச் செய்திகள் காட்டுத்தீ போல் பரவின. அமர்த்தியா சென் காலமானதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியான நிலையில், அவரது மகள் நந்தனா தேவ் சென் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
நந்தனா தேவ் சென் தனது டிவிட்டர் பதிவில்,
“நண்பர்களே, உங்கள் அக்கறைக்கு நன்றி ஆனால் அது போலியான செய்தி. பாபா (அமர்த்தியா சென்) நலமாக இருக்கிறார். எப்போதும் போல் அவர் பிசியாக இருக்கிறார்”
எனப் பதிவிட்டுள்ளார்.