ஸ்ரீநகர்
அமர்நாத் குகைக்கோயில் பனி லிங்க தரிசன யாத்திஅரிஅ வரும் ஜூன் 30 முதல் தொடங்குகிறது.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில் ஆண்டுதோறும் பனி லிங்கம் உருவாகிறது. இதை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வ்ருவதும் வழக்கமாகும் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல், மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அமர்நாத் யாத்திரை சரிவர நடக்காமல் இருந்தது.
இந்த ஆண்டுக்கான பனி லிங்க தரிசன யாத்திரை ஜூன் மாதம் 30 ஆம் தெதி முதல் தொடங்கும் என காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான யாத்திரை 43 நாட்கள் நடைபெற உள்ளன.
இந்த யாத்திரை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெற உள்ளது. இது குறித்து துணை ஆளுநர் வெளியிட்டுள்ள செய்தியில் வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் குகைக் கோவில் பனி லிங்க தரிசன யாத்திரை 43 நாட்கள் நடக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.