நெட்டிசன்
யாத்திரீகர்கள் மீதான தாக்குதல்: இப்படி சில கேள்விகள் குஜராத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிராக மோடியை கண்டித்து பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு விரைவில் தேர்தல் வர இருக்கிறது. இந்த நிலையில் திசை திருப்பும் நிகழ்வாகவே அமர்நாத் யாத்திரிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோ என்று சந்தேகிப்பவர்கள் இருக்கிறார்கள்.
தவிர அமர்நாத் தாக்குதல் குறித்த பல கேள்விகளும் எழுப்புகிறார்கள் பலர். அவர்களில் ஒருவரான Haris Mohamed என்பவரது முகநூல் பதிவு இது.
காஷ்மீர் அமர்நாத் யாத்திரை தாக்குதலுக்கு உள்ளான பேருந்து குஜராத் யாத்திரிகர்கள் சென்ற பேருந்து ஆகும், அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் பட்டியலில் பேருந்தின் என் இல்லை, மேலும் அதில் சென்ற யாத்திரிகர்களின் பெயர்களும் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்படாததால் எஸ்கார்ட் பாதுகாப்பு அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று சொல்ல படுகின்றது.
1, ஒரு உயர் பாதுகாப்பு பகுதியில் பதிவு செய்யப்படாத வாகனம் எப்படி அனுமதிக்கப்பட்டது?
2, யாத்திரிகர்கள் திரும்பி வரும் வெளில்யில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எப்போது வேண்டும் என்றாலும் தாக்குதல் நடைபெறும் என்று உயர் பாதுகாப்பை அளிக்கப்படும் இடத்தில் பதிவு செய்யாத யாத்திரிகர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்?
3, இரவு 7 மணிக்கு பின்பு வாகன போக்குவரத்து அனுமதிக்கபடாத சாலையில் 8 .30 மணிக்கு எப்படி வாகனம் வந்தது?
4, செக் போஸ்ட்-ஐ தாண்டி தான் எல்லா வாகனமும் செல்ல வேண்டும் என்ற நிலையில் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதியில் அனுமதி இல்லாத நேரத்தில் பாதுகாப்பு இல்லாமல் வாகனம் செல்ல எப்படி அனுமதிக்கப்பட்டது?
இந்த கேள்விகளுக்கு வரும் குஜராத் தேர்தலையும் தற்போது நாடெங்கிலும் காஷ்மீருக்காகவும், Gst க்காகவும் உயர்த்தப்படும் குரல்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் நமக்கு விடை கிடைக்கும்.