சென்னை:
ஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் 50 -க்கும் மேற்பட்டோர் சோனியா காந்தியிடம், அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு கட்டாயப்படுயுள்ளதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த அமரீந்தர் சிங்,  சோனியா காந்தியிடம், “இந்த அவமானம் போதும், இது மூன்றாவது முறையாக நடக்கிறது. இந்த அவமானத்துடன் என்னால் கட்சியில் தொடர்ந்து இருக்க முடியாது.” என்று கூறியுள்ளார்.
இருப்பினும், சிங் இதுவரை ராஜினாமா செய்ய மறுத்து வருவதாகவும்,  இது காங்கிரசில் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பை உள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில்,  புதிய நியமிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]