மலையாள நடிகையான ஜோதிர்மயி, தமிழில் நான் அவனில்லை, தலைநகரம், அறை எண் 305- கடவுள் உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர்.

2004-ஆம் ஆண்டு நிஷாந்த் என்பவரை மணந்த ஜோதிர்மயி 2011-ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். பின்னர் 2015-ஆம் ஆண்டு, பிரபல மலையாள ஒளிப்பதிவாளர், இயக்குநர் அமல் நீரத்தை திருமணம் செய்து கொண்டார்.

https://www.instagram.com/p/B_RyAKIpYfR/

இந்நிலையில் அமல் நீரத், தனது மனைவி ஜோதிர்மயியின் தலையில் முடி இல்லாமல் மொட்டையடித்துக் காணப்படும் புகைப்பட்ம ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் ‘தமஸோமா ஜ்யோதிர்கமய’ (இருட்டிலிருந்து எங்களை வெளிச்சத்துக்கு வழி நடத்திச் செல்) என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தின் வரிகளைப் பகிர்ந்துள்ளார்.

ஜோதிர்மயியின் இந்த புதிய தோற்றம் குறித்து பலரும் அதிர்ச்சியில் உள்ளனர் .