சென்னை:
தமிழக முதல்வர் உள்பட தமிழக அமைச்சர்கள் 9 பேர் ஏற்கனவே வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில், தற்போது மேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடு பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
31 அமைச்சர்களைக் கொண்ட தமிழக அமைச்சரவையில் முதல்வர் உள்பட முக்கிய அமைச்சர்கள் 12 பேர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது தமிழக மக்களிடையே கடும் அதிருப் தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசு செயல்படுறதா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாள் சுற்றுப்பயணமாக ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றுவிட்டார். அவருடன் சில அமைச்சர்களும் வெளிநாடு சென்ற நிலையில், பின்னர் தொடர்ந்து அமைச்சர்கள் வெளிநாடு பயணம் மேற்கொண்டன.
இந்த நிலையில், நேற்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரான கே.பாண்டியராஜன் எகிப்து புறப்பட்டுச் சென்றார்.
தமிக சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்மும் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சரான கே.பி.அன்பழகன் ஆகியோர் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ள அமைச்சர்கள் விவரம்:
- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
- அமைச்சர் எம்.பி. சம்பத்
- அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்
- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
- அமைச்சர் நிலோபர் கபில்
- அமைச்சர் கடம்பூர் ராஜூ
- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
- அமைச்சர் சி.வி.சண்முகம்
- அமைச்சர் கே.பி.அன்பழகன்
- அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்
தமிழக அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றன.