அகமதாபாத்,

குஜராத் தலித்தலைவரான ஜிக்னேஷ் மேவானி  இருந்து சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி குஜராத்தை ஆளும் பா ஜ க அரசு தலித் மக்களின் கோரிக்கையை கவனிப்பது இல்லை எனவும்,  தலித் மக்கள் முன்னேற்றத்துக்காக எந்த ஒரு திட்டமும் அறிவிக்கவில்லை என ஏற்கனவே கூறி வந்தார்.

அதைத்தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக சுயேச்சையாக வடகாம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் முன்னிலையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

குஜராத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்காக போராடிவருபவரும், காங்கிரஸ் கட்சி சார்பாக ரதன்பூர் தொகுதியில் போட்டியிடுப்வாருமான அல்பேஷ் தாக்கூரும் தற்போது முன்னிலை வகித்து வருவதாக கூறப்படுகிறது.

இவர்தான் மோடி ஒரு நாளைக்கு  ரூ.4 லட்சத்துக்கு காளான் சாப்பிடுகிறார் என்றும், அதன் காரணமாகவே சிவப்பு நிறமாக இருப்பதாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசுக்கு ஆதரவான  இந்த இரு இளைஞர்களும் முன்னிலை வகித்து வருவது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது-