மனிலா:
ஆசியாவில் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 50 சதவீத முதியவர்களுக்கு பென்சன் இல்லை என்று சர்வேதச தொழிலாளர் அமைப்பு நடத்திய சர்வே மூலம் தெரியவந்துள்ளது. உலக மக்கள் தொகையில் 29 சதவீதம் பேர் சமூக பாதுகாப்பு திட்டங்களை அனுபவிக்கின்றனர்.
இதில் ஆசிய நாடுகள் தங்களது குடிமக்களை பாதுகாக்க தவறிவிட்டது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உலக சமூக பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் மனிலா நாட்டு இயக்குனர் காலித் ஹசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘உலகம் முழுவதும் பல நாடுகள் சமூக பாதுகாப்பு முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதை பிலிப்பைன்ஸ் பின்பற்ற இது உகந்த நேரம் என்று நினைக்கிறேன். உலகளாவிய பென்சன் திட்டத்தை அறிமுகம் செய்து நாட்டின் முதியவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
சமீபத்தில் சமூக பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை பிலிப்பைனஸ் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா, தாய்லாந்து, மங்கோலியா, ப்ரூனேய், திமோர் போன்று உலகளாவிய தரமான சமூக பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்தால் தான் சர்வதேச இலக்கை அடைய முடியும் என்று அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
போதுமான பென்சன் வழங்கவில்லை என்றால் முதியவர்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள். 2017-2022ம் ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு திட்டங்களை மேம்படுத்த பிலிபைன்ஸ் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளு க்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு அங்கிகாரம் அளித்துள்ளது.