தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் தற்போது ‘புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புக்கான இடத்தைப் பார்க்க படக்குழுவினருடன் தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள ‘குண்டால’ நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்றுள்ளார் .
அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டிருந்தார் .
இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு நடத்தச் சென்றதால் இந்த படக்குழுவினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் ஆதிலாபாத் நேரேட்டிகுண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி, அதன் பின்னர் வழக்கு பதிவு செய்வதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.