அல்லு அர்ஜுன் கைது விவகாரம் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் தேஜா மற்றும் சிரஞ்சீவியின் மனைவியும் நடிகர் அல்லு அர்ஜுனின் அத்தையுமான சுரேகா ஆகியோர் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு வந்தனர்.

இந்த நிலையில் அல்லு அர்ஜுன் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவரை கைது செய்ய திங்கள்கிழமை வரை தடை விதிக்க வேண்டும் என்று அல்லு அர்ஜுன் சார்பில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுட்டள்ளது.

புஷ்பா-2 படத்தின் பிரீமியர் ஷோ டிசம்பர் 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இடம்பெற்றது.

இந்த படத்தைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் கூடியிருந்த நிலையில் படம் பார்க்க அந்தப் படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுனும் வந்திருந்தார்.

அல்லு அர்ஜுனை பார்த்ததும் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி முன்னேறிய நிலையில் அவருடன் சேர்ந்து திரையரங்கத்தின் உள்ளேயும் நுழைந்ததால் அரங்கத்தின் உள்ளே நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த நிலையில், படம் பார்க்க வருவதற்கு அல்லு அர்ஜுன் காவல்துறையில் அனுமதி வாங்கவில்லை என்றும் திரையரங்க உரிமையாளர்களும் இதுகுறித்து காவல்நிலையத்தில் தெரிவிக்கவில்லை என்றும் கூறி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இதில் தியேட்டர் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் அவரது தந்தை அல்லு அரவிந்த் காவல்நிலையம் சென்றுள்ளார்.

அல்லு அர்ஜுன் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவரை கைது செய்ய திங்கள்கிழமை வரை தடை விதிக்க வேண்டும் என்று அல்லு அர்ஜுன் சார்பில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது தொடர்பாக செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து விசாரிக்க நடிகர் சிரஞ்சீவி அவரது மகன் ராம்சரண் தேஜா மற்றும் சிரஞ்சீவியின் மனைவியும் நடிகர் அல்லு அர்ஜுனின் அத்தையுமான சுரேகா ஆகியோர் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு வந்தனர்.