அல்லு அர்ஜுனை 14 நாள் போலீஸ் காவலில் வைக்க நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புஷ்பா-2 படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்க வந்த ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் அல்லு அர்ஜுனை இன்று காலை கைது செய்த ஹைதராபாத் காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
நம்பள்ளி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில் அல்லு அர்ஜூன் மீதான எப்.ஐ.ஆர். ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் திங்கட்கிழமை வரை அவரை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
தவிர, ஷாருக்கான் திரைப்பட படப்பிடிப்பின் போது நடைபெற்ற சம்பவம் மற்றும் இதேபோன்ற வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மேற்கோள்காட்டி அல்லு அர்ஜுனை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் அல்லு அர்ஜுனை 14 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அவர் சஞ்சல் குடா சிறையில் அடைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.