சென்னை:
திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கக்கோரி அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் பாரதிராஜா தலைமையில் திரையுலகினர் மனு கொடுத்தனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையுலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பெரிய திரை, சின்னத்திரை மட்டுமல்லாது அதை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்ப ஊழியர்களும் வேலைவாய்ப்பின்றி அல்லல் பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மே மாதம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் (பெப்சி) ஆர்.கே. செல்வமணி, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் நடிகைகள் குஷ்பு, சுஜாதா, விஜயகுமார் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்து மனு கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில்,6வது கட்ட ஊரடங்கு வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கக்கோரி, அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் திரையுலகினர் மனு அளித்தனர்.
இயக்குனர்கள் பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர் எஸ்.ஏ. சந்திரசேகர், தயாரிப்பாளர் ராஜன் உள்பட திரையுலகினர் மனு அளித்தனர்