டெல்லி: தமிழகத்தில் வேலூர், நெய்வேலி, தஞ்சை, ராமநாதபுரத்தில் சிறிய ரக விமான சேவைகளுக்கான விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என  மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பதில் அளித்தார்.

உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் உதான் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, மாநிலங்களில் உள்ள பயன்படுத்தாத விமான நிலையங்களை சீரமைப்பு சிறிய ரக விமானங்களை  இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி,  ஒரு மணி நேர பயணத்திற்கு அல்லது அதிகபட்சம் 500 கிலோமீட்டர் தூரத்திற்கு 2,500 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ்  நாடு முழுவதும் 128 புதிய வழித்தடங்கலில் விமான சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டது. இதில், தமிழகத்திலும் வேலூர், சேலம், தஞ்சை உள்பட பல மாவட்டங்களில் விமா சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த கடந்த 2019ம் ஆண்டு    ஏப்ரல் 27ந்தேதி  குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.  அதன்படி தமிழகத்தில் சேலம் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது. சென்னை, சேலம், சென்னை திருச்சி  இடையே சிறிய ரக விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு (2021) வேலூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதி செல்லும் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி-வேலூர் இடையே  உதான் திட்டத்தின்படி திருப்பதியில் இருந்து வேலூருக்கு சென்னை வழியாக விமான போக்கு வரத்து சேவை நடைபெறும் என  ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், திமுக எம்.பி. வில்சன், மாநிலங்களவையில், வேலூர், நெய்வேலி, தஞ்சை, ராமநாதபுரம் விமான நிலையங்கள் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் தெரிவித்த மத்திய விமானம் மற்றும் சிவில் போக்குவரத்துத் துறை அமைச்சர்  ஹர்தீப்சிங் புரி, இந்த விமான நிலையங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில் சேவை தொடங்கும் என தெரிவித்தார்.