சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.4000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

சீனாவின் கொரோனா வைரஸ் இன்று இந்தியா உள்பட 190க்கும் மேற்பட் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதன் தாக்கத்தை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஏப்ரல் 14ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு ரூ.1000 உள்பட பல்வேறு நிவாரண உதவிகள் மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு கொரோனா நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.4ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டுவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில் இருந்து நம்மை பாதுகாப்போம்…
[youtube-feed feed=1]