லகாபாத்

த்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதால் 5 நகரங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.   நேற்று ஒரே நாளில் இக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.   அதற்கு முன் தினம் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி ஆனது.  இதையொட்டி மாநில அரசு கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக்கியது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது ஞாயிற்றுக் கிழமைகளைல் முழு ஊரடங்கு மற்றும் மாநிலம் முழுவதும் இரவு 8 முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.  ஆயினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.  இந்நிலையில் அம்மாநில முதல்வர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளார்.,

இது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது.   அப்போது மாநிலத்தில் அதிகம் பாதிப்பு ஏற்படும் 5 நகரங்களாக லக்னோ, கான்பூர், வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் கோரக்பூர் ஆகியவை கண்டறியப்பட்டன.  இந்த 5 நகரங்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கண்ட இந்த 5 நகரங்களிலும் முழு ஊரடங்கு ஏப்ரல் 26 வரை அமல்படுத்தப்பட உள்ளது.   இந்த கால கட்டத்தில் மருத்துவ மற்றும் சுகாதார சேவைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    இந்த நகரங்களில் நிலைமை அப்போதும் சீரடையவில்லை  எனில் ஊரடங்கு மேலும் தொடரலாம் என கூறப்படுகிறது.