அலகாபாத்: யோகி தலைமையிலான உ.பி. மாநில பாஜக அரசு கொண்டு வந்த மதரசா கல்விச் சட்டம் 2004 மதச்சார்பின்மை கொள்கையை மீறுவது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் சமீபத்தில் அரசு நிதியுதவி பெறும் மதரஸாக்கள் அல்லது கல்வி வாரியங்களில் மதக் கல்வியை வழங்குவது தொடர்பான யோகி தலைமையிலான அரசு கடந்த 2004ம் ஆண்டு மதரசா சட்டத்தை அமல்படுத்தியது. இதுதொடர்பான வழக்கின் விசாரணை யின்போது காரசார வாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், நீதிபதி விவேக் சவுத்ரி மற்றும் நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணை முடிவடைந்ததையடுத்து தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த நிலையில், மதரசா வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. உ.பி. மாநில பாஜக அரசு கொண்டு வந்த மதரசா கல்விச் சட்டம் 2004 மதச்சார்பின்மை கொள்கையை மீறுவது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.
உபி மாநில அரசு, மதரஸா கல்வி வாரியச் சட்டம், 2004 மற்றும் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (திருத்தம்) சட்டம், 2012 ஆகிய வற்றை மாநிலத்தில் அமல்படுத்தியது. இதில் உள்ள பல விதிகள் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதை எதிர்த்து, அன்ஷுமன் சிங் ரத்தோர் என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, மதக் கல்வியானது அரசாங்கத் தின் நிதியுதவி பெறும் நிறுவனங்களின் வரம்புக்குள் வர வேண்டுமா மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் மீதான அத்தகைய அமைப்பின் தாக்கங்கள் ஆகியவை வாதங்களாக இருந்தன.
மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆதித்ய குமார் திவாரி மற்றும் குலாம் முகமது கமி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இந்த வழக்கு, மதச் சுதந்திரம் மற்றும் கல்வியில் அரசின் தலையீடு என்று குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் இந்திய யூனியன் மற்றும் மாநில அரசு ஆகிய இரு தரப்பிலும் பதில் அளிக்கும்படி பல்வேறு கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக, கல்வித் துறைக்குப் பதிலாக சிறுபான்மைத் துறையின் கீழ் மதரஸா வாரியத்தை வைப்பது குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன, இது கல்வி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் சாத்தியமான சிக்கல்களை உருவாக்கும் என கூறப்பட்டது.
இந்த வழக்கின் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி தினேஷ் குமார் சிங் (தற்போது கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி) தலைமையிலான அமர்வு, அரசு நிதியுதவி பெறும் மதரஸாக்களில் மதக் கல்வியை அனுமதிப்பது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து பதில்களைக் கோரியது. இத்தகைய நடைமுறைகள் இந்திய அரசியலமைப்பின் 14, 25, 26, 29 மற்றும் 30 ஆகிய பிரிவுகள் உட்பட அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு விதிகளை மீறுமா என்று பெஞ்ச் குறிப்பாக கேள்வி எழுப்பியது.
இந்த விஷயத்தில் நீதிமன்றம் ஆலோசிக்கும்போது, இந்தியாவின் கல்வி முறைக்கு, குறிப்பாக மதச்சார்பற்ற கல்வி மற்றும் அரசாங்கத்தால் நிதியளிக்கப் படும் நிறுவனங்களில் மத போதனை ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையின் அடிப்படையில் இதன் விளைவு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தீர்ப்பில், மாநில அரசின் மதரசா கல்விச் சட்டம் 2004 மதச்சார்பின்மை கொள்கைகளை மீறும் செயல் என்று கூறிய நீதிமன்றம், மதர்சா கல்வி மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது என்றும், அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறியதுடன், மத போதனைகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முறையான கல்வி முறையில் இடமளிக்கப் படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியது.