சென்னை:
ஏப்ரல் – மே மாதம் அறிவிக்கப்பட்ட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. தேர்வுதேதிகள் ஊரடங்கு விலக்கப்பட்டப்பிறகு தெரிவிக்கப்படும் என்று கூறி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 14ந்தேதியுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா பரவல் காரணமாக, பல மாநிலங்கள் ஊரங்கை நீட்டிக்க கோரி வருகின்றன.
இந்த நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்து உள்ளது.
மேலும், ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டதும் செமஸ்டர் தேர்வுகளுக்கான பபுதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.