சென்னை:

தமிழகத்தில் நாளை பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.  சென்னையில் நாளை அரசு, தனியார் பள்ளிகள் இயங்கும் என்று  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்து உள்ளார்.

அரையாண்டு விடுமுறை முடிந்த ஜனவரி 2ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டு, கடந்த 6ந்தேதிதான் திறக்கப்பட்டது.

மேலும்,  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வாரம்  ஜனவரி 14, 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக். பள்ளிகள் நாளை இயங்கும் என என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]