டெல்லி: தற்போது நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக பிரபல இந்திய  கிரிக்கெட் வீரர்  ஹர்திக் பாண்ட்யா அறிவித்து உள்ளார். காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த,  ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா  காயம் காரணமாக தற்போது நடைபெற்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில்,  மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். பாண்ட்யா  விலகியதை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம்  உறுதிப்படுத்தியுள்ளது.

கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் அவரால் தொடர்ந்து விளையாட முடியாது என்பதால், அவர் விலகி உள்ளார். அவருக்கு,  பதிலாக வேகப்பந்து வீச்சாளர், பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என  பிசிசிஐ அறிவித்துள்ளது.

 உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 7 வது போட்டியிலும் வென்று இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் லிட்டன் தாஸ் அடித்த பந்தை தடுக்க முயன்ற இந்திய ‘ஆல்-ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா, இடது கணுக்காலில் காயமடைந்தார். இதைத்தொடர்ந்து, தற்போது மீதமுள்ள  உலகக்கோப்பை  போட்டிகளில் இருந்து விலகி உள்ளார்.