பெங்களூரு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் பெங்களூரு நகரில் அனைத்து ஆரம்பப் பள்ளிகளும் மூடபபட்டுள்ளன.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலகின் பல நாடுகளில் பரவி வருகின்றன.
உலகெங்கும் சுமார் 1 லட்சம் பேருக்கு மேல் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 3200 பேருக்கும் மேல் கொரோனா வைரஸ் காரணமாக உயிர் இழந்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது 40 பேருக்கு மேல் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
கர்நாடக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பெங்களூரு நகர், புறநகர் மற்றும் பெங்களூரு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது.