வடகொரியா

வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன

வடகொரியாவில் அடிக்கடி ஏவுகணை சோதனை நடப்பதும், அதை மற்ற உலகநாடுகள் எதிர்ப்பதும் தெரிந்ததே.  ஆனால் எந்த நாட்டின் எதிர்ப்பையும் சட்டை செய்யாது வட கொரியா தனது ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து வருகிறது.

தற்போது பாங்யான் என்னும் வடகொரியாவிலுள்ள ஊரிலிருந்து ஜப்பான் கடற்கரை பகுதியை நோக்கி ஒரு ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது.   இந்த ஏவுகணை 930 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது.

இந்த சோதனைக்கு ஜப்பான் உட்பட பல நாடுகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இது உலக நாடுகள் அனைத்துக்கும் ஆத்திரமூட்டும் செயல் என்றும், பொறுமைக்கும் எல்லை உண்டு எனவும் எச்சறிக்கை விடுத்துள்ளார்.