பெய்ஜிங்:

சீனாவில் முஸ்லிம் மக்களிடையே தேச பக்தியை அதிகரிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு அலுவலகங்களில் சீனாவின் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்று பிரதான முஸ்லிம் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சீனாவின் தலைமை இஸ்லாமிய அமைப்புக்கு சொந்தமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில்,‘‘ மசூதிகளில் தேசிய கொடிகளை ஏற்றி வைப்பதுடன், நாட்டின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் கலாசாரம் சார்ந்த பாரம்பரியங்களை பற்றியும் முஸ்லிம் மக்கள் கற்றறிந்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 35 ஆயிரம் மசூதிகள் உள்ளன. இந்நிலையில் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தனிப்பட்ட மதமாக இல்லாமல் ஒன்றிணைந்த சோஷலிச சமுதாயமாக முஸ்லிம் மக்கள் மாறற இந்த அறிவிப்பு உதவும் என்று அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.