
சென்னை
சென்னை மாநகராட்சி அணையர் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், “சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மூடப் படுகின்றன.
ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்களும், பல் பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள பதப்படுத்தப் பட்ட இறைச்சி விற்பனை கடைகளும் விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்புக்கு வர்த்தகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel