
டில்லி,
மெக்சிகோ நாட்டில் நேற்று முன்தினம் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. இதன் காரணமாக ஏராளமான கட்டிங்கள் இடிந்த விழுந்தன. இந்த விபத்தில் 250க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இந்நிலையில், இந்த பயங்கர நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஐ.நாபொதுச்சபைகூட்டத்தில்பங்கேற்கஅமெரிக்காசென்றுள்ளமத்தியவெளியுறவுஅமைச்சர்சுஷ்மாஸ்வராஜ், அங்கிருந்து மெக்சிகோ இந்திய தூதரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel