சிறுமிகற்பழிப்பு-கொலை: காமூகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு!

Must read

பாக்தாத்:

அரபு நாடான ஈரானில், சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றத்துக்காக, குற்றவாளிக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றபப்பட்டது.

ஈரான் நாட்டில் உள்ள அர்டேபிள் பகுதியில் வசித்து வந்த 7 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்ற காமூகன் கற்பழித்து கொலை செய்தான்.
இந்த வழக்கு ஈரான் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணையின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால், அவனை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போடும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து ஈரானில உள்ள பர்சாபாத் என்ற இடத்தில் மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போட ஏற்பாடு செய்யப்பட்டது.
பொதுமக்களின் ஆரவாரத்தினுடே அவனுக்கு மக்கள் கூட்டத்தின் மத்தியில் தூக்கிலிட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

More articles

Latest article