டில்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சோனியா நேற்ற திடீரென டில்லியில் உள்ள கங்காராம் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து கங்கா ராம் மருத்துவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உண்ட உணவில் ஒவ்வாமை ஏற்பட்டதன் காரணமாக சோனியா காந்தியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக  என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள னர்.

தற்போது  அவர் உடல் நலம் தேறி வருவதாகவும் இன்று வீடு திரும்புவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  மருத்துவமனை சிகிச்சையில்  இருந்தபடிய, மம்தா பானர்ஜியிடம் ஜனாதிபதி தேர்தல் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், வரும் 16ம் தேதி தம்மை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சோனியா காந்தி  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாரணாசி தொகுதியில் நடைபெற்ற பிரசார பேரணியில் கலந்து கொண்டதுபோது  திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து  டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

அதையடுத்து மேல்சிகிச்சைக்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.