சென்னை

சென்னை தலைமைச் செயலகத்தில்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்திலும் பரவி  உள்ளது.  இந்தியாவிலும் அந்த பாதிப்பு உள்ளதால் நாடெங்கும் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில்  இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.  ஆகவே அங்கு சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.  சட்ட மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள், மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகு செயலகத்தினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.