சிம்லா: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக இமாச்சலபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரல் பரவல் காரணமாக நாடு முழுவதும் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புகளுக்கு ஏற்ப கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந் நிலையில் இமாச்சல பிரதேச மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் தலைமையில் கொரோனா நிலை குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் ஜெய்ராம் தாகூர் பேசியதாவது:
மாநிலத்தில் ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுகிறது. நர்சிங் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்று கூறினார். இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இதுவரை 61, 616 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.