
மதுரை
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அனைத்து மக்களும் ஒரே தூரத்தில் நின்று அம்மனை தரிசிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
திருச்சியில் உள்ளது புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு இலவச தரிசன வரிசையில் வருவோர் தூரத்தில் இருந்து தரிசனம் செய்வார்கள் அதே நேராத்தில், கட்டணம் செலுத்தி வரும் பக்தர்களுக்கு கட்டணத்துக்கு அருகில் இருந்து தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் வடிவமைத்துள்ளது. இது குறித்து திருச்சியை சேர்ந்த முருகேசன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று “திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இலவச மற்றும் கட்டண தரிசனம் செய்வோருக்கு வித விதமான தூரத்தில் தரிசனம் செய்ய வைப்பது தவறானது. இறைவன் சன்னிதானத்தில் இவ்வாறு வேறுபாடு செய்யக் கூடாது. எந்த வரிசையில் வந்தாலும் சமமான தொலைவில் நின்று அம்மனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும்” என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]