டெல்லி:

லைநகர் டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்து செய்யப்படுவதாக  டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதல், பள்ளிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் பல தேர்வுகள் ஒத்தி வைக்கப்பபட்டன.
இந்த நிலையில், கல்லூரிகள், பல்கலை. இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டியது கட்டாயம் என்று யுஜிசி அறிவித்தது. இந்த தேர்வானது செப்டம்பருங்கள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற கூறியிருந்தது.
இதற்கு ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழகம் உள்பட பல மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில்,டெல்லியில், கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.  டெல்லி கொரோனா பரவல் அதிகமாகும் நிலையில், செமஸ்டர் தேர்வுகளை நடத்த சாத்தியமில்லை. எனவே, மாணவர்களின் மதிப்பீடு நடைமுறைகள் குறித்து அந்தந்த பல்கலை கழகங்களே முடிவு செய்து கொள்ளும்படி மாநில துணைமுதல்வர் மனோஜ் சிசோடியோ தெரிவித்து உள்ளார்.
[youtube-feed feed=1]