ஜுர அறிகுறிகளுடன் மருத்துவமனை வருபவர்களுக்கு கொரோனா சோதனை

Must read

டில்லி

ருத்துவமனைக்கு ஜுர அறிகுறிகளுடன் வருவோர் அனைவருக்கு கொரோனா சோதனை  நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் கொரோனா பரவுதல் அதிக அளவில் உள்ளது.  கொரோனா தாக்குதல் உள்ளவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலம் பரவுதலைக் கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.   இதையொட்டி சோதனை கொள்கையில் மாறுதல் செய்யப்பட்டு கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளோரைச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது.   வீடு வீடாகச் சென்று ஜுரம், ஜலதோஷம், தொண்டைக்கட்டு போன்றவை உள்ளோர் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.   குறிப்பாகப் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் அதாவது ஹாட்ஸ்பாட் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இந்த நடைமுறை உள்ளது.   இந்த கணக்கெடுப்பு பீகாரில் 38 மாவட்டங்களில் 16ஆம் தேதி முதல் தொடங்கபட்டுளது.   இதைப் போல் நாட்டில் பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டு வருகின்றன.

பல இடங்களிலும் கொரோனா தொற்று கொத்து கொத்தாகக் கண்டுபிடிக்கப்படுவதால் சோதனைகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.  அதன்படி மருத்துவமனைகளுக்கு ஜுரம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வருவோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.   அதைப் போல் மக்கள் தாமாக முன் வந்து சோதனைக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்து வருகிறது.

தாமாக முன் வந்து சோதனை செய்துக் கொள்வோரின் வசதிக்காகத் தனியார் மருத்துவமனைகளிலும் மாதிரிகள் சேகரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளன.   இந்த சோதனை வெளிநாடு செல்லாதோர் மற்றும் கொரோனா பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ளோரும் மற்றும் பாதிக்கப்படோருடன் தொடர்பு இல்லாதோரும் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article