சென்னை; ஆகஸ்டு 29ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உளளது.


ஆகஸ்டு 29ந்தேதி மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அன்றைய பகல் பொழுதில், அனைத்துக் கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகஅரசு கொண்டு வந்துள்ள  நான் முதல்வன் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி அனைத்துக் கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்,  மாணவர்களுக்கு குறிப்பாக  கல்லூரி மாணவர்களுக்கு  உயர் கல்வி குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பததுடன், கல்லூரிகள், நுழைவுத் தேர்வுகள், உதவித் தொகை, கல்விக் கடன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்த தகவல்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் பட்டியலில் உள்ள தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்துகொள்கின்றனர்.

[youtube-feed feed=1]