சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் கைவிடப்படும் அரசாணை வெளியிட்டுள்ளது.

2019ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தார்.
இந் நிலையில், 2019ம் ஆண்டு ஜனவரி 22 முதல் 30ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்து தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel