கேரளா:
கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த 7 பிரிட்டன் டூரிஸ்ட்கள் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர்.

எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பிரிட்டனில் இருந்து வந்த 61 வயதான பெண்மணி கொரோனா சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவருடன் பிரிட்டனில் இருந்து சுற்றுலா பயணிகளாக வந்த 7 பேரும் சிகிச்சைக்கு பின்னர் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் கடந்த மார்ச் 6 ஆம் தேதி லண்டனில் இருந்து கொச்சிக்கு வந்தனர். இவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.  இவர்கள் கொச்சியில் மூன்று நாள் தங்கியிருந்த பின்னர் மார்ச் 10 ஆம் தேதி இடுக்கி மாவட்டத்திற்கு சென்றடைந்தனர்.

இவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்க பட்டத்தை அடுத்து, இவர்கள் அனைவரையும் தனிமையில் இருக்குமாறு கேரளா சுகாதார துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மார்ச் 14 ஆம் தேதி இவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப் பட்டது. இந்நிலையில் அவர்கள் தனிமைப் படுத்துதலில் இருந்து தப்பி, லண்டன் செல்ல கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து துபாய் செல்ல விமானம் ஏற முயன்றவர்களை தடுத்த அதிகாரிகள், அவர்களை  தனிமைப் படுத்தியுள்ளனர். அடுத்த சில நாட்களில் சுற்றுலா பயணிகளின் எஞ்சிய 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது உறுதியானது.

இவர்களுக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு 6 பேர் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை,61 வயதான பெண்ணும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த குழுவினர் இன்னும் தங்கள் சொந்த நாடு திரும்ப வில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எர்ணாகுளத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இவர்களில், 32 வயதான ஒருவர், 27 வயதான ஒருவர் இருவரும் கண்ணூரை சேர்ந்தவர்கள். 48 வயதான ஒருவர் எர்ணாகுளத்தை சேர்ந்தவர். மற்ற இவரும் மாணவர்கள், இவர்கள் இருவரும் தலா 21 மற்றும் 23 வயது கொண்டவர்கள்.
இதே போன்று எர்ணாகுளத்தை சேர்ந்த உபேர் டிரைவர் ஒருவர், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

கேரளாவில் மொத்தமாக 345 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதில் 84 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.