சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் விரைவில், புதிய எம்பிக்களாக நாடாளுமன்றத்தில் பதவி ஏற்கிறார்கள்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் தேதி பிப்ரவரி = மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு மற்றும் தம்பிதுரை (அதிமுக), ஜி.கே.வாசன் (தமாகா) ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.
மேலும், தற்போது தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்பிக்களையும், அதிமுக 2 எம்பிக்களையும் தேர்வு செய்ய முடியும் என்பதால், திமுகவுக்கு 4 எம்.பி.க்களும், அதிமுகவுக்கு 2 எம்.பி.க்களும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து திமுக கூட்டணி சார்பில், திமுகவில் 2 பேரும், கூட்டணி கட்சிளான தேமுதிக, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் வழங்கப்பட்டது. அதிமுகவில் ஒரு இடம் அதிமுகவுக்கும், மற்றொரு இடம் பாமக அன்புமணிக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து 6 வேட்பாளர்களும், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய இறுதி நாளாக கடந்த 5ம் தேதி தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதன்படி, திமுகவில், திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் மனு தாக்கல் செய்தனர். அதுபோல அதிமுக சார்பில் தம்பிதுரையும், பாமக தரப்பில் அன்புமணி ராமதாசும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இவர்களுக்கு எதிராக வேறு யாரும் முறையான மனு தாக்கல் செய்யாதால், தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 9ந்தேதி மாலை 3 மணிக்கு தமிழக தேர்தல் அதிகாரி சாந்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மு.தம்பிதுரை (அதிமுக), கிறிஸ்டோபர் மாணிக்கம் (காங்கிரஸ்), எல்.கே.சுதீஷ் (தேமுதிக), அன்புமணி (பாமக) ஆகிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் அதற்கான சான்றிதழையும் தேர்தல் அதிகாரியிடம் இருந்து வெற்றிச்சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.
வெற்றிபெற்று சான்றிதழ் பெற்றுக்கொண்ட 4 பேரும் தங்கள் கட்சியின் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் ஏப்ரல் 2ம் தேதிக்கு பிறகு, நாடாளுமன்றம் கூடும் நாளில் மாநிலங்களவையில் புதிய எம்பிக்களாக தமிழகத்தில் இருந்து வெற்றிபெற்ற 6 பேரும் பதவியேற்றுக்கொள்வார்கள்.
[youtube-feed feed=1]