இந்தி நடிகர் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டபோது அதற்கு காரணம் வாரிசு நடிகர்கள் அவரை அவமானப் படுத்தியதுதான் என்ற விவாதம் எழுந்தது. குறிப்பாக நடிகை அலியாபட் இதில் வசமாக சிக்கினார். சுஷாந்த் பற்றி அவரிடம் ஒருமுறை கேட்டதற்கு, ’அவர் யாரென்றே எனக்கு தெரியாது”என்ற துடன் சுஷாந்த் இறந்தபோது பாலிவுட்டே அதிர்ச்சி அடைந்து இரங்கல் தெரிவித்த போது இவர்மட்டும் வாய் மூடிக்கிடந் தார்.
தனது தந்தை மகேஷ்பட் பாலிவுட்டில் பிரபல இயக்குனர் என்பதாலேயே அவர் அப்படி நடந்துக்கொண்டதாக ரசிகர்கள் திட்டித்தீர்த்தனர். சுஷாந்த் தற்கொலைக்கு அலியாபட் அவரை அவமானப்படுத்தி யதும் காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் மகேஷ்பட் இயக்கத்தில் அலியாபட் நடித்த சடக் 2 படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளி யானது. உலகிலேயே அதிக டிஸ்லைக் வாங்கிய டிரைய்லராக அமைந்தது. சுஷாந்த் ரசிகர்கள் இந்த அவமானத்தை அலியா பட்டுக்கு ஏற்படுத்தினர். இந்நிலையில் அந்தப்படம் ஒடிடியில் ரிலீஸ் ஆனது.
சடக் 2 படம் ஒடிடியில் தோல்வி அடைந் தது. அமேசான் பிரைமில் வெளியாகும் படங்களுக்கான விவரங்களை தரும் தளமான IMDB பல படங்களுக்கு ஸ்டார் ரேட்டிங்குகளை கொடுத்து வருகிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தில் பேச்சாரா படத்திற்கு முழு மதிப்பெண் வழங்கப் பட்ட நிலையில், ஆலியா பட்டின் சடக் 2 படத்துக்கு வெறும் 1.1 ஸ்டார் ரேட்டிங் தான் கொடுத்துள்ளது. இது அலியா பட்டின் திரைப் பயணத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமானமாகப் பார்க்கப்படு கிறது.
இது சுஷாந்தத் ரசிகர்களால் மட்டும் கிடைத்த அவமானமல்ல ஒட்டு மொத்த மாக பட விமர்சகர்கள் தந்த முடிவாகவும் இருக்கிறது. மோசமான படம் என்று விமர்சகர்கள் சதக் 2 படத்தை போட்டு தாக்கி விட்டார்கள்..
முன்னதாக கடந்த 1991ம் ஆண்டில் இயக்குநர் மகேஷ் பட் இயக்கத்தில் சடக் முதல் பாகம் படம் வந்திருந்தது. அப்படம் சூப்பர் ஹிட் அமைந்திருந்தது. அந்த படத்தின் 2ம் பாகமான சடக் 2 படுதோல்வியாக அமைந்திருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த சஞ்சய் தத் 2ம் பாகத்திலும் நடித்திருந்தார். மேலும் ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர் ஆகியோரும் நடித்திருந்தனர்.