partnership
இந்தியாவில் ஆன்லைன் சில்லறைச் சந்தையின்  தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்க  சமீபத்தில் அலிபாபா குழுவின் தலைவர் மைக்கேல் எவன்ஸ் மற்றும் அதன் உலக நிர்வாக இயக்குனர் கே குரு கௌரப்பன்  இருவரும் டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி-யைச் சந்தித்தார்.
இந்திய நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் சில்லறை விற்பனைச் சந்தையில் நுழைவது குறித்து வளர்ச்சித் திட்டங்கள் வைத்திருந்த சீன e- காமர்ஸ் பெரும்புள்ளியான அலிபாபா இதில் கூட்டணி அமைப்பது குறித்து டாடா சன்ஸ்-யை அணுகினர்.
நம்பத்தகுந்த தகவல்களின்படி,  இரு நிறுவனங்களும்  விவாதித்து அலிபாபா மைய  இ- காமர்ஸ் வணிகத்திற்கு ஆதரவு,  தளவாடங்கள்,  நேரடிவிற்பனைக் கடைகள் மற்றும் ஆம்னி சேனல் குறித்து முடிவு எட்டப்பட்டுவிட்டது.
“நாங்கள் மிகவும் கவனமாக இந்தியாவில்  டிஜிட்டல் இந்தியா பின்னணியாக கொண்டு  இ-காமர்ஸ் வாய்ப்பு குறித்து கவனமுடன் ஆராய்ந்து  வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால்  மிகவும் ஆர்வமுடன் உள்ளோம்” என டாடா சன்ஸ் செய்தித்தொடர்பாளர் தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.
கடந்த 2015ல், அலிபாபா $ 377 பில்லியன் (சுமார் ரூ 25,08 கோடி) மதிப்புள்ள பொருட்கள் விற்றுள்ளது. ஒப்பிடுகையில், இந்தியாவின் அனைத்து இதர இ-காமர்ஸ் நிறுவனங்கள் 16 $ பில்லியன் (சுமார் 1.06 லட்சம் கோடி ரூபாய்) என்றார் மோர்கன் ஸ்டான்லி .
உப்பு-முதல் எஃகு  வரை விற்கும் டாடா குழுமம், $ 108,78 பில்லியன் (சுமார் ரூ 7.24 லட்சம் கோடி) விற்பனை செய்துள்ளது. டாட்டா நிறுவனம், நாட்டின் பல பிற நுகர்வோர் பிராண்டுகளுடன் தொடர்பில் இருந்து வருகிறது.
இதேப் போல், மிகப்பெரிய காபி நிறுவனம் ஸ்டார்பக்ஸ் டாட்டா குளோபல் பானங்களுடனான கூட்டணியின் மூலம் இந்தியாவிற்குள் நுழைந்தது.