ticket3
ticket2
train1
மும்பை இரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்த ஒருப் பெண்மணி, அவரது குற்றத்திற்கு அபராதம் செலுத்த மறுத்து, விஜய் மல்லையா பெயரை இழுத்து வாதம் செய்த விசித்திரச்  சம்பவம் மும்பையில் நடைப்பெற்றது.
மும்பை மிரரில் வெளியான செய்தியின்படி , மகாலட்சுமி இரயில்நிலையத்தில் ஒரு பெண் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் சோதனையில் ஈடுபட்டபோது, தென் மும்பையில் உள்ள ஒரு ஆடம்பரமான சமூகத்தின் குடியிருக்கும் பிரேமலதா பன்சாலி, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துப் பிடிபட்டார். எனவே, பன்சாலிக்கு ரூ 260 அபராதம் செலுத்தப் பட்டது. அதை அவர் செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப் கொண்டார்.
ticket1
பன்சாலி தன் தவறுக்காக அபராதம் செலுத்துவதற்கு பதிலாக தன்னை  இரயில் நிலைய அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து செல்லும்படி கேட்டுக்கொண்டார்.  அலுவலகத்தில், பன்சாலி “மல்லையா ரூ 9000 கோடியை ஏப்பம்விட்டு வங்கிகளை ஏமாற்றி நாட்டை இழப்பை ஏற்படுத்திவிட்டதாகவும், ஆனால் அதிகாரிகள் ஏழை மக்களையே தொந்தரவு செய்வதில் மும்முரம் காட்டுகிறீர்கள்” எனத் திரும்பத் திரும்ப வாதிட்டார்.
இந்த வாக்குவாதம் 12 மணி நேரம் வரை நடைபெற்றதாக கூறப்படுகிறது.   RPF,, GRP, மற்றும் Agripada போலீஸ் நிலையங்களின் பெண் கான்ஸ்டபிள்களின் ஆலோசனைகளுக்கு பன்சாலி அசைந்து கொடுப்பதாக இல்லை. எனவே, அதிகாரிகள் அவரது கணவரை வரவழைக்க முயற்சித்தற்கும் அவர் வளைந்து கொடுக்கவில்லை. பன்சாலி தன்னைச் சிறைக்கு அனுப்பி வைக்குமாறும் அல்லது நீதிவானின் முன்பாகவோ  நிறுத்துமாறும்,  அப்போது தான் தம்மால் அன்னா ஹசாரே போன்று அநீதியை எதிர்த்து போராட முடியும் என்று பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இந்தச்சோதனையான சம்பவத்திற்கு பிறகு, அதிகாரிகள் பன்சாலியை ஒரு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியப் பின் அதிகாரப்பூர்வமாக தடுத்து வைத்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை 11.40 மணிக்கு வெளியில்விடப் பட்டார். இப்போது பன்சாலியின் வழக்கு, செவ்வாய்க்கிழமையன்று மும்பை சென்ட்ரலில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதியின் முன் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட அவர், 1500 ரூபாயிலிருந்து 460 ஆக குறைக்கப்பட்ட பின்பும், அபராதம் கட்ட முடியாதென கூறியதால், அவரை ஏழு நாட்கள் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.
 
trainticket